நாட்டுக்கோழி வளர்ப்பு மாதம் 50000 வரை லாபம் ஈட்டலாம்
இக்கால மக்கள் இயற்கை மற்றம் ஆரோக்கியமான இறைச்சி உணவுகளை விரும்புகின்றனர். உலகளவில் தரமான நாட்டுக்கோழி இறைச்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் (Country Chicken Farming) ஒரு லாபகரமான மற்றும் ஆரோக்கியமான தொழிலாக உள்ளது. இதற்கு குறைந்த முதலீடு மற்றும் எளிய பராமரிப்பு போதுமானது. நாட்டுக்கோழி வளர்த்து அதன் முட்டை மற்றும் இறைச்சியை விற்பனை செய்து லாபம் ஈட்டலாம்.
நாட்டுக்கோழி வளர்ப்பில் சில இன கோழிகள் சேவல் வகை அதிக எதிர்ப்பு சக்தி மற்றும் நல்ல இறைச்சி தரம். வான்ஜா வகை, முட்டைக்கும் இறைச்சிக்கும் பொருத்தம்.
நாட்டுக்கோழி முட்டைகள் ஆரோக்கியம் மிக்கவை.
கூண்டின் அளவு ஒரு கோழிக்கு சுமார் 1 சதுர அடி இடம் தேவைப்படும். நல்ல காற்றோட்டமும் வெப்பம் சரியான அளவில் இருக்க வேண்டும்.
கோழி தீவனங்களில் புல், தானியம், கீரை, கோதுமை, சோளம், ராகி, பாசிபயறு ஆகிய இயற்கை உணவை வழங்குவது நல்லது. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு இரண்டு முறை உணவளிக்க வேண்டும்.
கோழிகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முக்கிய அங்கம் ஆகும், எனவே முறைப்படி தடுப்பூசிகள் கொடுக்கவும். வாரந்தோறும் கூண்டுகளை சுத்தம் செய்து கிருமி நீக்கி பராமரிக்கவும். தோல் மற்றும் உடல்புற்று நோய்களுக்கு நேரடி கவனம் செலுத்தவும்.
நாட்டு கோழி சந்தை மதிப்பின்படி , முட்டை மற்றும் இறைச்சிகளை நாட்டு சந்தை, மற்றும் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கோ அல்லது ப்ரோக்கர்களுக்கோ விற்கலாம்.
நாட்டு கோழி வளர்ப்பில், சிறு முதலீடு அவசியம் ஆகும். 50 கோழிகளுடன் தொடங்குவதற்கு ₹25,000 - ₹30,000 வரை முதலீடு தேவைப்படும்.
₹1,000 முதலீட்டில் தொடங்கக்கூடிய சிறுதொழில்கள் Click Here
நாட்டு கோழி வளர்ப்பில், வருமானம் பொறுத்தவரை ஒரு முட்டை விலை ரூபாய் ₹10 என்ற மதிப்பிலும் , நாட்டுக்கோழியின் இறைச்சி ₹300 - ₹400 க்கு விற்கப்படும். இதனை நீங்கள் ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து விற்பனை செய்யலாம்.
கோழிகளின் மலம் பசுமைப் பண்ணைகளுக்கு நல்ல உரமாக செயல்படுகிறது. எனவே இதன்மூலமும் உங்களால் வருமானம் ஈட்ட முடியும்.
நாட்டு கோழி வளர்ப்பில், முக்கிய குறிப்புகள் இயற்கை முறையில் வளர்ப்பதால் ஆரோக்கியமான இறைச்சியும் முட்டையும் கிடைக்கும். குறைந்த முதலீட்டில் இடமின்மை இருந்தாலும் கூட சிறிய அளவில் தொடங்க முடியும். ஆரம்ப கட்டத்தில் சிறிது அதிக கவனம் தேவை. நோய் பரவல் உச்சகட்ட காலங்களில் கவனக்குறைவு இருந்தால் பாதிப்பு அதிகமாகும்.
நாட்டு கோழி வளர்ப்பு, சரியான திட்டமிடலுடன் வேலை செய்யும் போது, இது நிச்சயமாக லாபகரமாக இருக்கும்.
.jpg)

.jpg)

.jpg)